N. V. Kalaimani

1932 - 2007
country of citizenship:  IndiaBritish RajDominion of India
languages spoken, written or signed:  Tamil
occupation:  writerauthor

என். வி. கலைமணி (பிறப்பு: திசம்பர் 30, 1932) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார். 1946 ஆம் ஆண்டு முதல் அண்ணாவின் எழுத்தாலும் பேச்சாலும் பேரன்பு கொண்டவர்​. அண்ணா எழுதிய கம்பரசத்தை படித்து, இதன் விளைவாக பல ஆதாரங்களை திரட்டி 1947 ஆம் ஆண்டில் திருப்புகழ் ரசம் என்னும் முதல் நூலை இந்தியாவில் வெளியிட தடை விதிக்கப் பட்டதால், இலங்கையில் வெளியிடப்பட்டது​. அண்ணா பேசிய நல்ல தீர்ப்பு என்னும் நூலால் சுயமரியாதை இயக்கத்திலும் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் ஈர்க்கப்பட்டார். 1950 ஆம் ஆண்டில் திராவிடன் வார ஏட்டிலும், பின்னர் முரசொலி, மாலைமணி, எரியீட்டி, சவுக்கடி, நமது எம்.ஜி.ஆர் உட்பட பல நாளேடுகளில் துணையாசிரியராகவும், ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 1952 ஆம் அறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன் தலைமையில் நாடகம் நடத்தியவர். சொல்லஞ்சலி, தமிழஞ்சலி, ருஷ்யப் புரட்சி உட்பட அறுபது நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய "திருக்குறள் சொற்பொருள் சுரபி" எனும் நூல் தமிழ்நாடு அரசின், தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. Source: Wikipedia (ta)

Series

There is nothing here

Create a new serie

Articles

There is nothing here

Human - wd:Q12979634

Welcome to Inventaire

the library of your friends and communities
learn more
you are offline